மஸ்கெலிய இளைஞர்கள் 3 பேர் நீர்கொழும்பு கடலில் காணாமல் போயினர்!

நீர்கொழும்பு கடற்பகுதியில் குளிக்கச் சென்ற மஸ்கெலிய பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

மஸ்கெலியவை சேர்ந்த 7 இளைஞர்கள், நீர்கொழும்பில் உள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்விற்கு சென்றுள்ளனர். பின்னர் முகத்துவார கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது, அலையில் அடித்து செல்லப்பட்டு 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

அவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here