டொனால்ட் ட்ரம்பின் கொரோனா தொற்றை முன்னரே கணித்த கண்பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வாங்கா!

பல்கேரியாவைச் சேர்ந்த கண்பார்வையற்ற தீர்க்கதரிசியாக குறிப்பிடப்படும் பாபா வாங்காவினால் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலைவிதி முன்னறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“போல்கன்களின் நாஸ்ட்ராடமஸ்” என்றும் அழைக்கப்படும் பாபா, 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி “ஒரு மர்மமான நோயால்” பாதிக்கப்படுவார் என்று முன்னறிவித்ததாக பாபாவின் ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். 2020 இல் அமெரிக்க ஜனாதிபதி காது கேளாமல், மூளையில் கட்டி ஏற்படுமென அவர் கணித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கடந்த 2ஆம் திகதி கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாபா வாங்காவின் கணிப்பு குறித்த தகவல் தீவிமாக பரவி வருகிறத.

பாபா வாங்காவினால் ப்ரெக்ஸிட், 9/11 மற்றும் தாய்லாந்து சுனாமி குறித்து கணிக்கப்பட்டிருந்தது. 1996 இல் அவர் இறக்கும் வரை எதிர்காலத்தை கணித்து வந்தார்.

பாபா வாங்கா மசிடோனியாவில் உள்ள ஒரு பண்ணையில் வளர்ந்தார். அப்போது, அவர் ஒரு தூசி புயலில் கண்பார்வையை இழந்தார். இந்த சம்பவத்தின் மூலம், அவர் “இரண்டாவது பார்வையை” பெற்றதாக அவரது ரசிகர்கள்- அவரை தீவிரமாக நம்புபவர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது, எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் சக்தியை இரண்டாவது பார்வையாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1989 ஆம் ஆண்டு பாபா வாங்கா ஒரு கணிப்பில்- “திகில், திகில்! எஃகு பறவைகளால் தாக்கப்பட்ட பின்னர் அமெரிக்க சகோதரர்கள் வீழ்வார்கள். ஓநாய்கள் ஒரு புதரில் அலறும். அப்பாவிகளின் இரத்தம் பாயும்.” என குறிப்பிட்டிருந்தார்.

செப்டம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த விமான தாக்குதலையே அவர் கணித்ததாக பின்னர் பாபாவின் ரசிகர்கள் அர்த்தப்படுத்தினார்கள்.

பாபா வாங்கா தனது கணிப்புகளை ஒருபோதும் எழுதவில்லை. வாய்மூலமாகவே குறிப்பிட்டார்.

பல்கேரிய அரசாங்கம் அவருக்கு ஓய்வூதியம் அளித்ததுடன், அவரது கணிப்புக்களை ஆவணப்படுத்தும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தியது.

எனினும், பாபா வாங்காவின் கணிப்புக்கள் அனைத்தும் சரியாக அமையவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. 2010- 2014 இற்குள் அணுசக்தி யுத்தம் ஏற்படுமென அவர் கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here