உணவு தேடி வந்த மரையை இறைச்சியாக்கியவர்கள் கைது!

வீதி அருகாமையில் உணவு தேடி வந்த மரையை கடத்தி இறைச்சியாக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் உள்ள பிட்டம்பே எனும் பகுதியில் மரை ஒன்றினை வேட்டையாடிய பின்னர் அதனை இறைச்சியாக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றின் ஊடாக அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு எடுத்துச்செல்லும் வழியில் இன்று மதியம் கைதாகினர்.

தகவல் ஒன்றினை அடிப்படையாக வைத்து அப்பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் 37 கிலோ எடை இறைச்சியை தம்வசம் சட்டவிரோதமாக கடத்திய ஹோட்டல் உரிமையாளர் உட்பட இருவரை கைது செய்திருந்தனர்.

இதன் போது கைதானவர்கள் அக்கரைப்பற்று விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 55 42 வயதினை உடையவர்கள் எனவும் சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் விசாரணை செய்யப்பட்ட பின்னர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here