வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிப்பவர்கள் இந்திய எல்லைக்கு சென்று, இந்திய றோலர் படகுகளில் தங்கினர்: 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

வடமராட்சி கிழக்கில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிமாவட்ட மீனவர்கள், இலங்கை கடல் எல்லையை கடந்த சென்று இந்திய மீனவர்களின் றோலர் படகுகளில் ஏறி தங்கியிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, கடலட்டை பிடித்த 70 பேர் அவர்களின் வாடிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை கடல் எல்லையைத் தாண்டி இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று, இந்திய மீனவர்களது றோலர்ப் படகுகளில் ஏறி தங்கியிருந்துள்ளதுடன், இந்திய தமிழ்நாட்டுப் பகுதிக்குள் சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் 9 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்பில் இருந்த 70 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here