கம்பெரலிய வீதிகளை போல டக்ளஸின் வீதிகள் தண்ணீரில் கழுவப்படாதாம்!

கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்மொழியப்பட்ட வீதி புனரமைப்பிற்கான ஆரம்ப பணிகள் இன்றைய தினம் கொழும்புத்துறை பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒரு லட்சம் மாற்றுவழிகள் திட்டத்தின் கீழ் இவ் வீதிகள் யாழ் மாவட்டத்தில் புனரமைக்கப்படவுள்ளன. இதில் 25 வீதிகள் காப்பெட் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளன. இந்த அரசின் வீதி அபிவிருத்தி என்பது கம்பெரெலியா திட்டம் போன்று மழையில் கழுவப்பட்டு போகிறதாகவே அல்லது காற்றில் சுற்றப்பட்டு போகின்றதாகவே, இருக்காது.இது தரமானதாகவும் நீண்டகால பாவனையுடையதாகவும் காணப்படும் என டக்ளஸ் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தின் நோக்கம் அபிவிருத்தியே. முதலில் நாங்கள் ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். 20 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் எதிர்க்கட்சி வேலையினை செய்கிறார்கள். தவறுகள் விடுபட்டு இருந்தால் அதனை நாங்கள் திருத்திக் கொண்டு செல்வோம். ஜனாதிபதி தேர்தலிலும் சரி பாராளுமன்ற தேர்தலிலும் சரி, மக்களினுடைய அமோக ஆதரவினை இந்த அரசு பெற்றுள்ளது.

மக்கள் இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை வாக்கினை அளித்துள்ளார்கள். அதன்போது 19வது அரசியலமைப்பு சீர்திருத்தம் நாட்டுக்கு உதவாது என மக்களுடைய ஆணையைப் பெற்று அரசு ஆட்சி பீடம் வந்திருக்கிறார்கள்.

இந்த அரசின் மூலம் வடக்கில் பெருமளவு அவர்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here