பிரான்ஸில் வசிக்கும் இலங்கை குடும்பத்தில் வன்முறை: பெண், 4 குழந்தைகள் வெட்டிக்கொலை!

இன்று (3) சனிக்கிழமை காலை பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதி நொய்ஸி-லெ-செக் (சீன்-செயிண்ட்-டெனிஸ்) இல் உள்ள ஒரு வீட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை பின்னணியுடைய குடும்பமொன்றிலேயே சம்பவம் நடந்துள்ளது.

நொயிஸி-லெ-செக்கிலுள்ள ரூ இம்மானுவேல் அரகோவில் உள்ள ஒரு குடியிருப்பில் கொலைச்சம்பவங்கள் நடந்தன. காலை 11:00 மணி முதல் தீயணைப்பு படை மற்றும் பொலிசார் அங்கு நிலை கொண்டுள்ளனர்.

முதல் தகவல்படி, குடும்பத்தில் மாமா முறையானவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை சுத்தி மற்றும் கத்தியைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து அவசர சேவைகள் வந்தபோது இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் மூன்று பேர் மதியம் 12:30 மணியளவில் உயிரிழந்தனர். நான்கு குழந்தைகளும், ஒரு பெண்னும் உயிரிழந்தனர்.

குறைந்தது மூன்று பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் வீட்டுக்கு வெளியில் சிதறி கிடந்தன.

இரத்த காயங்களிற்குள்ளான இளைஞன் அங்கிருந்து தப்பியோடி உதவிகோரினார். உடனடியாக அங்கிருந்த ஒருவரால் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்தனர்.

கொலையாளியென கருதப்படுபவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக கிளிச்சியில் (ஹாட்ஸ்-டி-சீன்) பியூஜோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதலிற்கான காரணம் தெரிய வரவில்லை.

விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here