கிளிநொச்சியில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட
அலுவலகம் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய தினம் கிளிநெச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் ஊடகத்துறை, தபால் துறை இராஜாங்க அமைச்சர்
வியாழேந்திரன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சேனாநாயக்க உள்ளிட்டவர்கள் திறந்து வைத்தனர்.

மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் என 25 அலுவலகங்கள் ஏற்படுத்தப்படுவதோடு,
மாணவர்களிடையே ஊடக கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், பிராந்திய ஊடகவியாளர்களின் நலன்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்வோம், அவர்களின் நெருக்கடிகள், தொடர்பில் நாம் நன்கு அறிவோம்.

 எனவே பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு கவனம் செலுத்தப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here