இலங்கையில் நாளாந்தம் 10 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்!

இலங்கையில் ஆண்டுதோறும் 3,000 முதல் 5,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வைத்தியர்கள் இந்த தகவலை வெளியிட்டனர்.

தினசரி 9- 10 வரையான பெண்கள் மார்பக புற்றுநோயுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டபடியுள்ளனர்.

50 வயதிற்கு அதிகமானவர்கள் அல்லது அந்த வயதிற்கு அண்மைய வயதுகளில் இருக்கும் பெண்களே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். உலகளவிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான ஆபத்தாக மார்பக புற்றுநோய் அமைந்துள்ளது.

சுகாதாரத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம், அறிகுறிகளை கவனித்து நோயின் ஆரம்பகட்டத்திலேயே விழிப்படையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான இந்த ஆண்டின் கருப்பொருள் “ஆரம்பகாலத்தை அடையாளம் காணுங்கள்- உயிர்களைப் பாதுகாக்கவும்“ என்பதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here