திலீபனை பயங்கரவாதியென்ற கெஹலியவின் முகத்திலறைந்த யாழ் செய்தியாளர்: தமிழர்களிற்காக போராடிய தியாகியென முகத்தின் நேரே சொன்னார்!

தியாகி திலீபன் உங்களிற்கு வேண்டுமானால் பயங்கரவாதியாக இருக்கலாம். ஆனால், எம்மை பொருத்தவரை- தமிழ் மக்களிற்கு- அவர் தியாகி. தமிழ் மக்களிற்காகவே அவர் போராடி உயிர் நீத்ததாக கருதுகிறார்கள்.“

இவ்வாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிற்கு முகத்தில் அறைந்தால் போல நேரில் சொன்னார், யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.

இதன்போது, செய்தியாளர் ஒருவர் தியாகி திலீபன் நினைவேந்தல் தடை குறித்து கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கெஹலிய எகத்தாளமாக பதிலளித்தார்.

“திலீபன் ஒரு பயங்கரவாதி. அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது. பின்லாடனை நினைவுகூர அமெரிக்கா அனுமதிக்கிறதா? இல்லையே. அது போலத்தான் திலீபனும் ஒரு பயங்கரவாதி. அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது. இன்று திலீபனை நினைவுகூர கேட்பார்கள். நாளை எக்ஸ்ஐ நினைவுகூர, வையை நனைவுகூர கேட்பார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது“ என்றார்.

இதன்போது, எழுந்த செய்தியாளர் ஒருவர்- “தியாகி திலீபன் உங்களிற்கு வேண்டுமானால் பயங்கரவாதியாக இருக்கலாம். ஆனால், எம்மை பொருத்தவரை- தமிழ் மக்களிற்கு- அவர் தியாகி. தமிழ் மக்களிற்காகவே அவர் போராடி உயிர் நீத்ததாக கருதுகிறார்கள்“ என்றார்.

இதை மொழிபெயர்பாளர் மொழிபெயர்த்து சொன்ன போது, “இது அவரது கருத்து“ என்று விட்டு, கெஹலிய கப்சிப்பாக இருந்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here