சிறையிலிருந்து விடுதலையான இளம்பெண் மீண்டும் கைது!

சிறையில் இருந்து விடுதலையான இளம் பெண் ஒருவர் 102 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று (02) மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 07, முள்ளிப்பொத்தானை, பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரான பெண் திருகோணமலை சிறைச்சாலையில் 2 கிலோ கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவருடம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னள் பிணையில் விடுதலையான நிலையிலே மீண்டும் 102 கிராம் கேரளா கஞ்சாவை சிறிய மேசை ஒன்றின் அடிப்பகுதியில் சூட்சகமான முறையில் மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த சந்தேக நபரான பெண் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 102 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக கந்தளாய் போதைப் பொருள் குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரான குறித்த பெண்ணை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here