சுனாமியால் தொலைந்த மகனை 16 ஆண்டுகளின் பின் சந்தித்த விவகாரம் நாடகமா?

சுனாமியினால் தொலைந்த மகனை 16 ஆண்டுகளின் பின்னர் தாயார் கண்டுபிடித்தார் என, இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் வைரலான செய்தி இப்பொழுது வேறொரு வடிவத்தை எடுத்துள்ளது.

அந்த இளைஞனின் தாயார் தானேயென நூருல் இஷான் ஜுனைதீன் என்ற பெண் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து, 16 ஆண்டுகளின் பின்னர் மகனை கண்டறிந்த விவகாரம் நாடகம் என தெரிவிக்கப்படுகிறது.

இளைஞனின் உண்மையான தாயான நூருல் இஷான் ஜுனைதீன், இளைஞன் தொடர்பான அனைத்து பதிவுகளையும் பொலிசாரிடம் சமர்ப்பித்தார். எனினும், 16 வருடங்களின் பின்னர் மகனை சந்தித்தாக கூறிய பெண்ணால் மகன் தொடர்பான முக்கியமான ஆவணங்களில் எதையும் சமர்ப்பிக்க முடியவில்லை.

இந்த இளைஞன் 19/04/2001 அன்று அம்பாறை வைத்தியசாலையில்  தனக்கு பிறந்ததாகவும், குடும்ப சுகாதார அலுவலரால் நடத்தப்பட்ட அனைத்து கிளினிக்குகளிலும் கலந்து கொண்டதாகவும் நூருல் இஷான் ஜுனைதீன் பொலிசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

கணவர் கைவிட்டு சென்றதால் குழந்தையை சிரமத்துடன் வளர்த்துள்ளார். சிறுவன் அம்பாறை சதாதிச மஹா வித்யாலயத்தில் சேர்க்க்பட்டுள்ளார். பின்னர், நூருல் இஷான் ஜுனைதீன் மீண்டும் திருமணம் செய்து ஹம்பாந்தோட்டைக்குச் சென்றார். அங்கு சிறுவன் சூ சி தேசிய பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், நூருல் இஷான் ஜுனைதீனின் இரண்டாவது கணவரால் சிறுவன் மோசமாக நடத்தப்பட்டதால், அவர் கணவருடன் கோபித்துக் கொண்டு மீண்டும் அம்பாறைக்கு வந்திருந்தார்.

அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை முக்கியப்படுத்தியதால் பரவலான விளம்பரம் ஏற்பட்டு, தன்னையும் மகனையும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கியதாகவும், உண்மையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாரிடம் கோரியுள்ளார்.

இதையடுத்து, மரபணு பரிசோதனை மூலம் உண்மையை அறிய பொலிசார் நடடிக்கையெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here