வவுனியாவிற்கு விஜயம் செய்த சமல்!

உள்ளகபாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சமல்ராயபக்ச இன்றையதினம் வவுனியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது 55 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மாவட்டசெயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்தினை உத்தியோகபூர்வமாக அவர் திறந்துவைத்தார்.

அதனைத்தொடர்ந்து வடக்கு,கிழக்கு,வடமத்திய மாகாணங்களை சேர்ந்த பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இதன்போது பிரதேச ரீதியாக மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் வடமாகாண ஆளுனர் எம்.சாள்ஸ்,வடமத்தியமாகாணஆளுனர் மகிபால கேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கு.திலீபன்,காதர் மஸ்தான்,றிசாட் பதியூதீன்,அரசஅதிபர் சமன்பந்துலசேன,பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ன,வடமாகாண மற்றும் வன்னிமாவட்ட சிரேஸ்ட பதில் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here