மட்டக்களப்பில் 104 வயது பெண் கௌரவிப்பு!

சர்வதேச முதியோர் தினம் இன்று மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 70 இற்கும் மேற்பட்ட முதியோர்கள் பிரதேச சபை தவிசாளர், சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஸ்ட உத்தியோகஸ்த்தர்களால் பொன்னாடை போர்த்தியும் பரிசு பொருட்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

தவிசாளர் மற்றும் சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தின் ஆகியோர்களால் முதியோர்கள் தொடர்பான வாழ்த்துக்களும் விசேட உரையும் நிகழத்தப்பட்டது. முதியோர்களால் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை பிரதேசத்தில் 104 வயதுடைய தம்பிக்குட்டி வெள்ளச்சி உம்மா அடையாளம் காணப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டமை இந் நிகழ்வில் விசேட நிகழ்வாக காணப்பட்டது. இவ் நிகழ்விற்கு அல்நூர் செயாறற்றரிஅமைப்பு அனுசரனை வழங்கியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here