இளம் நடிகையை சோபாவில் தள்ளிவிழுத்தி உறவுகொள்ள முயன்ற இயக்குனரிடம் நாளை விசாரணை!

இந்தி திரையுலகில் போதைப்பொருள் புழக்க பிரச்சனையை விட பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது பிரபல இயக்குநர் மீது இளம் நடிகை கொடுத்த பாலியல் புகார்.

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வரும் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாயல், பட வாய்ப்பிற்காக சென்ற தன்னை அனுராக் காஷ்யப் படுக்கைக்கு அழைத்ததாகவும், அப்போது தனக்கு 200 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட அனுபவம் உண்டு என பெருமையாக கூறியதாகவும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினார்.

பட வாய்ப்பிற்காக தொடர்பு கொண்ட தன்னை அனுராக் வீட்டிற்கு வரச்சொல்லி முகவரி கொடுத்ததாகவும், ஒரு நடிகை என்ற அடையாளத்துடன் வர வேண்டாம் என்று கூறியதால் சல்வார் கமீஸ் அணிந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். முதல் நாள் நல்லபடியாக பேசிய அனுராக் எனக்கு சாப்பாடு கொடுத்து உபசரித்தார். மீண்டும் ஒரு முறை வீட்டிற்கு வரும் படி அழைத்தார். மது அருந்திக் கொண்டிருந்ததுடன், புகைப்பிடித்தார். அது சிகரெட் இல்லை, ஏதோ கெட்ட வாடை வந்தது. அவர் என்னிடம் பேசிக் கொண்டே அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

புத்தகங்கள், பழைய வீடியோ கேசட்டுகள் இருந்த அந்த அறையின் சோபாவில் என்னை தள்ளி என்னுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயன்றார். நான் என்னை விட்டு விடும் படி கெஞ்சினேன். அவரும் அடுத்தமுறை வரும் போது மனதளவில் தயராக வா என சொல்லி அனுப்பினார். அதன் பின்னர் நான் அவரை சந்திக்க செல்லவே இல்லை எனக்கூறியிருந்தார். ஆனால் இந்த புகாரை அனுராக் மறுத்த நிலையில், அவருக்கு ஆதரவாக அவருடைய மனைவிகள் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து அனுராக் காஷ்யப் மீது மும்பை போலீசிடம் பாயல் கோஷ் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதோ தவிர விசாரணை நடைபெறவில்லை. இதனால் பொங்கியெழுந்த பாயல், அனுராக் மீது நடவடிக்கை எடுக்காவிடில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கவர்னரிடமும் முறையிட்டார். நடிகை பாயல் கோஷின் அழுத்தத்தைத் தொடர்ந்து மும்பை போலீசார் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு நாளை வெர்சோவா காவல் நிலையத்தில் காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here