தோழியின் தற்கொலை வழக்கில்: லட்சுமி புரமோத்துக்கு முன் ஜாமீன்

பிரபல முன்னணி மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகை லட்சுமி புரமோத். பவுர்ணமி திங்கள், பூக்கலாம் வரவாயி உள்பட பல தொடர்களில் நடித்தார். இவரது தோழி ரம்சி. இவரும் லட்சுமி கணவரின் தம்பி ஹாரிசும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் ஹாரிசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க லட்சுமி புரமோத் முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் ரம்சி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை வழக்கில் காதலன் ஹாரிசுடன், லட்சுமி புரமோத்தும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஹாரிசுக்கு வேறொரு திருணமம் செய்து வைக்க முயற்சி. ரம்சியின் கர்ப்பத்தை கலைக்க ஏற்பாடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் லட்சுமி புரமோத் மீது வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் லட்சுமி புரமோத் தலைமறைவானார். அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் கொல்லம் செஷன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் லட்சுமி புரமோத் தற்போது தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

அவர் நடிக்காவிட்டால் மொத்த படப்பிடிப்பும் நின்று விடும் இதனால் பலர் வேலை வாய்ப்பு இழப்பார்கள். லட்சுமி போலீசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார். இதனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அக்டோபர் 6ந் தேதி வரை லட்சுமியை கைது செய்யக்கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட்டு முன் ஜாமீன் வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here