மன்னார் கடற்பரப்பில் இலங்கை கப்பல்களிலிருந்து தவறி விழுந்ததா?: தனுஷ்கோடியில் கரையொதுங்கிய இரப்பர் உருளையால் பரபரப்பு!

தனுஸ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் இன்றைய தினம் புதன் கிழமை காலை கரை ஒதுங்கிய இரப்பர் உருளை குறித்து தமிழக கடலோர காவல் குழும பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

ராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற நாட்டு படகு மீனவர்கள் அரிச்சல் முனை அருகே இராட்சத ரப்பர் உருளை கரை ஒதுங்கியுள்ளதாக தனுஸ்கோடி தமிழக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்க்குச் சென்ற மெரைன் பொலிஸார் சோதனை நடத்தினர்.

பின்னர் கைப்பற்றப்பட்ட உருளையை கரைக்கு கொண்டு வர முயற்சித்தனர். காற்றின்வேகம் அதிகரித்ததால் அதனை ஒத்தப்பட்டி கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

சுமார் 15 உயரமும் 6 அடி விட்டமும் கொன்ட இரப்பர் உருளை சுமார் 3 டன் எடை கொன்டதாக இருக்கும் என ராமேஸ்வரம் கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்தார்.

கரை ஒதுங்கிய பைபர் உருளை ஆழ்கடலில் செல்லும் கப்பல்களில் மிதவையாகவோ அல்லது துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றோடு உன்று மோதி சேதமடையாமல் தடுக்கும் உருளையாகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இந்த வகையாக ரப்பர் உருளை தூத்துக்குடி துறைமுகத்தில் பயன்பாட்டில் இல்லை என்பதால் இலங்கை துறைமுகத்திற்க்கு வந்த கப்பல்களில் இருந்து தவறி விழுந்து தனுஸ்கோடி கடற்பகுதிக்குள் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் மெரைன் பொலிஸாருடன் பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here