பேருந்துக்குள் பெண்ணை உரசிய இளைஞன் கைது!

பேருந்தில் பெண்ணொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறையிலிருந்து அளுத்கம நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணுடனேயே இளைஞன் சில்மிசம் புரிந்துள்ளார்.

நேற்று அலுவலக பணி முடிந்து கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கி சென்ற பெண்ணுடனேயே, 24 வயதான இளைஞன் அத்துமீறி நடந்து கொண்டார். 49 வயதான 2 பிள்ளைகளின் தாயான பாதிக்கப்பட்ட பெண், அளுத்கம பேருந்து நிலையத்தில் இறங்கியதுடன், அங்கு கடமையிலிருந்த பொலிசாரிடம் விடயத்தை தெரிவித்தார்.

இதையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here