துண்டாடப்பட்ட கை மீள இணைக்கப்பட்டது: யாழ் போதனா வைத்தியசாலையில் அசத்தல்!

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, கை மீள பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த 23.ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபருக்கு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர் , முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகளை வழங்குவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை ஒருவருக்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் யாழ் போதனாவைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

பொதுமக்கள் கைகள்,கால் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடைய வேண்டும். மேலும் அளவுக்கு மேலாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்க முடியாது போகக்கூடும்.

இது பல சிக்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here