அகழிக்குள் விழுந்த குட்டியை மீட்க போராடிய தாய் யானை!

தந்திரிமலை வனப்பகுதியில் நீர் அகழியில் சிக்கிய யானைக்குட்டியொன்றை, வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் உதவியுடன் தாய் யானை காப்பாற்றியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அந்த பகுதியால் சென்றபோது, யானைக்குட்டியின் அவலச்சத்தத்தை அவதானித்துள்ளனர். அந்த சத்தம் வந்த திசைக்கு சென்றபோது, அகழியில் யானைக்குட்டி விழுந்து, வெளியே வர முடியாமல் சிக்கியிருந்தது.

தாய் யானை பெரும் பிரயத்தனம் செய்தும் குட்டியை மீட்க முடியவில்லை. சுமார் ஒன்றரை முதல் இரண்டு மாதங்களேயான யானைக்குட்டியே சிக்கியிருந்தது.

முதல் நாள் யானையும், குட்டியும் நீர் அருந்த வந்தபோது அகழிக்குள் விழுந்திருக்கலாமென கருதப்படுகிறது.

பின்னர், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் உதவி புரிந்து யானைக்குட்டி மீட்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here