முறையற்ற விதமாக தயாரிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வரும் தேயிலை!

கண்டி, வெலம்பொட பொலிசார் நடத்திய சோதனை நடவடிக்கையில் தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலையொன்றில் 20,000 கிலோ கழிவு தேயிலையை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் (28) இந்த சம்பவம் நடந்தது.

3,000 கிலோ கழிவு தேயிலையை சேமித்து வைக்க உரிமம் பெற்று, அதை விட அதிகமாக சேமித்து வைத்து இந்த மோசடி நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இங்கு சேமிக்கப்பட்டுள்ள தேயிலை இலைகளை, ஒரு தடவையில் 1,000 கிலோ என்ற விகிதத்தில் ஒரு பெரிய கொங்கிரீட் கூரையில் உலர்த்தப்படுகிறது. சுகாதார நடைமுறைகளை மீறி உலர்த்தப்படுவதால் தேயிலை இலைகளில் நுண்ணுயிரிகள் சேரும் அபாயமுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வெலம்பொட-கூரதெனிய வீதியிலுள்ள இந்த கழிவு தேயிலை களஞ்சியத்தை பொலிசார் சீல் வைத்தனர். இது தொடர்புடைய அதிகாரிகளினால் ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்த தேயிலை அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னருவையில் விற்பனை செய்யப்படுகின்றன என்று பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here