ரிஷாத் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பான விசாரணைகள் முடிந்த பின்னர் நேற்று (29) மாலை 05.00 மணியளவில் ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டதாக சிஐடி தெரிவித்துள்ளது.

ரியாஜ் பதியுதீன் 2020 ஏப்ரலில் புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிஐடியால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 05 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டார்.

ஏப்ரல் 2020 இல், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி ஜாலிய சேனரத்ன ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சந்தேகநபர் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here