20வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்று 2வது நாளாகவும் விசாரணை!

20 வது திருத்த வரைவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்களை தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற ஆயம் இன்று (30) இரண்டாவது நாளாக பரிசீலிக்கும்.

நேற்று தனது சமர்ப்பிப்புகளைச் செய்த சட்டமா அதிபர், பாராளுமன்றத்தில் குழு நிலை விவாதங்களின் போது முன்மொழியப்பட்ட 20 வமு திருத்தத்தின் வரைவில் பல மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் விரும்புகிறது என்று தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தனது தீர்மானத்தை 21 நாட்களுக்குள் உயர்நீதிமன்ற ஆயம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 வது திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுதாரர்கள் முன்மொழியப்பட்ட 20 வது திருத்த வரைவு முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ சர்வஜன வாக்கெடுப்பிற்குள்ளாக்கப்பட வேண்டும், மற்றும்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவையென அறிவிக்கும்படி கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here