அதிபர், ஆசிரியர்களின் தனிப்பட்ட விபரங்களை சேகரிக்கும் பொலிசார்: ஆசிரியர் சேவைகள் சங்கம் கண்டனம்!

அதிபர், ஆசிரியர்ககளின் தனிப்பட்ட விபரங்களை பொலிசார் சேகரிப்பதை உடன் நிறுத்தும்படி, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் அரசியல் உறவுகள் குறித்து பொலிசார் விசாரணை செய்து வருவதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

உளவியல் யுத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் காவல்துறையைப் பயன்படுத்துகிறது என்றும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட முயற்சிக்கும்போது தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதன் மூலம் தொழிற்சங்கங்களை அகற்றி அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் ஜெயசிங்க கூறினார்.

எனவே இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு கல்வி அமைச்சின் செயலாளரை தொழிற்சங்கம் கோரியது.

உத்தியோகபூர்வ வழிமுறைகள் மூலம் தகவல்களை சேகரிப்பதற்கு பதிலாக பாடசாலைகளுக்கு வரும் அதிகாரிகளால் தகவல் சேகரிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here