விஜயகாந்த் மனைவிக்கு கொரோனா!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போது பிரேமலதா விஜயகாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் பொது உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு இலேசான கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் “திருமதி. பிரேமலதா விஜயகாந்த் (பொருளாளர், தேமுதிக) 2020 செப்டம்பர் 28 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 29, 2020 அன்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சீராக மற்றும் கவனிப்பில் உள்ளார். திரு விஜகாந்த் (நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர், தேமுதிக) அவரது ஆரம்ப சோதனைகள் நடத்தப்பட்டவுடன் விரைவில் வெளியேற்றப்படுவார்.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை, சீராக இருக்கிறார், நிலையானவர் மற்றும் அளிக்கப்படும் சிகிச்சை நன்கு பயனளித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here