கிளிநொச்சியில் அதிகாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையில் கடையும் வீடும் பலத்த சேதம்

கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற
பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மாமரம் சரிந்து விழுந்ததால் கடை
ஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவு சேதமாகியுள்ளது.

இன்று அதிகாலை பலத்த காற்றுடன் மழையும் பெய்துள்ளது இதன் காரணமாக மரம்
சரிந்து விழுந்துள்ளது இதன்போது அருகில் இருந்த தச்சுப் பட்டறை முற்றாக
சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அதன் அருகிலிருந்த விட்டு திட்டத்தினூடாக
அமைக்கப்பட்டிருந்த வீட்டின் கூரையின் மேல் மரம் விழுந்ததனால் அவ் வீடு
பகுதி அளவு சேதமாக்கப்பட்டுள்ளது.

மரம் சரிந்து விழுந்த கடையையும் வீட்டையும் கரைச்சி பிரதேச செயலாளர்
ஜெயகரன் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here