திலீபன் கொலையாளியாம்: வீரவன்ச, கெஹலியவையே மிரள வைத்த டக்ளஸ்!

தியாகி திலீபன் ஒரு கொலையாளி. அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை என முந்திரிக்கொட்டை தனமாக கருத்து கூறி, கோட்டாபய அரசிடம் நல்ல பிள்ளை பெயர் வாங்க முயன்றுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஊடக பிரதானிகளுடன் மஹிந்த ராஜபக்ச இன்று நடத்திய சந்திப்பின் போது, டக்ளஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபனிற்கு நினைவேந்தல் நடத்த வேண்டும் என ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே குரலில் தமது நிலைப்பாட்டை உண்ணாவிரதம் மற்றும் கதவடைப்பின் மூலம் அரசுக்கு உறைக்கும் விதமான தெரிவித்துள்ளனர்.

இந்த கதவடைப்பு, உண்ணாவிரதம் குறித்து பிரதமரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அவர் பதில் சொல்ல முன்னரே- முந்திரிக்கொட்டை தனமாக முந்திக் கொண்டு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார்.

“திலீபன் ஒரு கொலையாளி. அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை. எனது தம்பியையும் அவர்தான் கடத்தி கொன்றார். அவரை வைத்து அரசியல் செய்கிறார்கள்.“ என்றார்.

இந்த சந்திப்பில் மஹிந்த, கெஹலிய ரம்புக்வெல, விமல் வீரவின்ச போன்றவர்கள் அங்கிருந்த போதும், அவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர்.

தற்போதைய அரசில் டக்ளஸ் தேவானந்தா குறித்து அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படாமையினால், அரசின் கவனத்தை ஈர்க்க டக்ளஸ் அண்மை நாட்களில் திலீபன் தொடர்பில் இந்த கருத்தை தெரிவிக்கலாமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here