மாடு வெட்டுவதற்கான தடை பற்றிய மஹிந்த சொன்ன முக்கிய விடயம்!

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பாக அரசாங்கம் ஒரே கருத்தை கொண்டுள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை பத்திரிகை ஆசிரியர்கள், ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதாகவும், 20 வது திருத்தம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் கூறினார்.

தனிநபர்களுக்கும் கட்சிகளுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஆனால் பாராளுமன்றத்திற்கு வரும்போது அனைவருக்கும் ஒரே ஒரு கருத்துதான். சிலர் பேசுகிறார்கள். சிலர் பேசுவதில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் அனைவரும் வாக்களிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

பசுவதை தடைச்சட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

கால்நடைகள் படுகொலை செய்ய தடை விதிக்க ஆளும் கட்சி எம்.பி.க்கள் முன்பு உடன்பட்டிருந்த போதிலும், பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் முடிவை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here