இலங்கையின் புதிய சரக்கு விமான நிறுவனம்!

இலங்கையின் புதிய வணிக சர்வதேச விமான நிறுவனமான ஸ்பார்க் ஏயார் நிறுவனம் எதிர்வரும் 2021 பெப்ரவரி முதல் இயங்க ஆரம்பிக்கவுள்ளது. மத்தள விமான நிலையத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயற்படவுள்ளது.

‘ஸ்பார்க் எயார்’ நிறுவனம் ஆரம்பத்தில் இரண்டு எயார்பஸ் ஏ 330 விமானங்களை சரக்கு நடவடிக்கைகளுக்காக இயக்கவுள்ளது. கொரோனா பெருந்தொற்று முடிந்த பின்னர், பொருத்தமான சமயத்தில் பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் விரிவுபடுத்தும்.

ஸ்பார்க் எயார் நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளின் தலைவர் கப்டன் உதித தன்வத்த தெரிவித்தபோது, இரண்டு எயார்பஸ் ஏ 330 விமானங்களும் குத்தகை அடிப்படையில் பெறப்படும், தகுதியான உள்நாட்டினருக்கு வேலைவாய்ப்ப வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சரக்கு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, நிறுவனம் மத்தள விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

டிசம்பர் மாதம் முதல் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகுதியான 2,000 க்கும் மேற்பட்ட உள்நாட்டவர்களிற்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

விமானத்திற்கான நேரடி முதலீடு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் முதலீட்டார்கள் பற்றிய மேலதிக விபரம் வெளியிடப்படவில்லை.

கப்டன்களான ரொபர்ட் ஸ்பிட்டல், ரம்ஸி ரஹீம், சமின் அத்தநாயக்க, ஆஷான் டி அல்விஸ் மற்றும் சூரஞ்சன் டி சில்வா ஆகியோர் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அமைப்பின் இயக்குநர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here