வெற்றுக்கதிரைகளுடன் அபிவிருத்திக் குழு கூட்டத்தை நடத்தும் மஸ்தான்!

துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டமானது சற்று முன்னர் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக இன்றைய கலந்துரையாடலில் திணைக்களத்தின் தலைவர்கள் பலர் சமூகமளிக்கவில்லை.

இது தொடர்பில் துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர், அவர்கள் இனிவரும் காலங்களிலாவது அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு அனைத்து திணைக்கள தலைவர்களையும் வரவழைக்குமாறும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த அபிவிருத்தி குழுக் கூட்டங்கள் பலனற்றவை ஆகி விடும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here