துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்!

துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் துணுக்காய் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தானின் தலைமையில் துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கு.திலீபன், துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், துணுக்காய் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள், பிரதேச மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here