வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவுப்பொருட்களால் கொரோனா பரவுமா?

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இல்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கருத்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மூலம் வைரஸ் பரவாது என்றும், பொருட்களின் மேற்பரப்பில் இந்த வைரஸ் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டுமே வாழும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வரும் உணவு மூலம் வைரஸ் பாதிக்கப்படலாம் என்று சிலர் அஞ்சுகிறார்கள், அது அநாவசிய அச்சம் என தெரிவித்துள்ளார்.

மக்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் சுவாச அமைப்பு மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது. எனவே அத்தகைய உணவில் இருந்து வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இல்லை என்றார்.

மேற்பரப்புக்களில் வைரஸ் மூன்று நாள் மட்டுமே உயிர் வாழும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும உணவு இலங்கைக்கு வந்து சேர அதிக நாட்கள் எடுப்பதால், இலங்கைக்கு உணவின் மூலம் கொரோனா வந்தடையவோ, அந்த பொருட்களை பாவிப்பவர்கள் தொற்றுக்குள்ளாகவோ வாய்ப்பில்லையென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here