தென்னோலையிலிருந்து உறிஞ்சுகுழாய் (straw) 6 கோடிக்கு விற்பனை இந்தியப் பேராசிரியர் சாதனை

தென்னோலையினால் கூரைகள், நெய்த பைகள், விளக்குமாறு என பல்வேறு பயன்பாடுகள் உள்ளன.

இந்தியாவில் பெங்களூரு நகரத்தில் இருக்கும், கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் இணை பேராசிரியரான சாஜி வர்கீஸ், 51, வளாக மைதானத்தில் பல உலர்ந்த தேங்காய் இலைகள் கிடப்பதைக் கவனித்தபோது, ​​தேங்காய் இலைகளில் இருந்து உறிஞ்சு குழாய்களை உருவாக்கியிருக்கிறார் இது குறித்து அவர் தெரிவித்தபோது

“ஒவ்வொரு ஆண்டும் ஒரு தென்னை மரம் இயற்கையாகவே அதன் ஆறு இலைகளை இழக்கிறது. இதே விஷயத்தில் நான் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளிலிருந்து, நம் நாட்டில் பல கிராமப்புறங்களில், இந்த இலைகள் வெறுமனே அகற்றப்படுவதில் உள்ள சிரமத்தால் வெறுமனே எரிக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தேன். 2017 ஆம் ஆண்டில் நான் ஒரு இயற்கைக்கு கேடு விளைவிக்காத தயாரிப்பை உருவாக்க முடிவு செய்தேன், அதன் விளைவுதான் தென்னம் ஓலைகளிலிருந்து செய்யப்படும் உறுங்சு குழாய்கள் என்றார்.

இப்போது அவை ரூ .3-10 ரூபாய்களிற்கு விற்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் உற்பத்தியை அறிமுகப்படுத்தியதிலிருந்து 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 20 மில்லியனுக்கும் அதிகமான உறுஞ்சுகுழாய்களிற்கான  கோரல்கள் பெற்றதாக அவர் கூறுகிறார். அவை இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 6 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here