கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்து முடங்கியது முல்லைத்தீவு

தமிழ் மக்களினுடைய உரிமைகளை வலியுறுத்தி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்ரிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது குறிப்பாக நகர்ப் பகுதிகளில் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து நகர்ப் பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருக்கும் நிலைமையிலும் அரச திணைக்களங்கள் வங்கிகள்  தனது சேவைகளை ஆற்றி வருகின்றது இருப்பினும் குறித்த அரச திணைக்களங்களும் சேவைகளை பெறுவதற்கு வருகின்ற மக்களின் அளவு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசு பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதும் தனியார் பேருந்துகள்  அனைத்தும்  சேவையில் ஈடுபடவில்லை என அறியமுடிகின்றது

பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகக்குறைவாக காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது இதேவேளை பிரதான நகரங்களில் பூட்டப்பட்டு இருந்த கடைகளை திறப்பதற்காக போலீசார் கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது

அடக்கு முறைகளை தாண்டியும் ஹர்த்தால்  உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here