பங்களாதேஷ் அணி இலங்கை வராது!

இலங்கை- பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“நிலைமை மேம்பட்டால் எதிர்காலத்தில் தொடரை நடத்த முடியுமென்பதை நாங்கள் அவர்களிடம் கூறியுள்ளோம்” என்று பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் கூறினார்.

இலங்கைக்கு வரும் பங்களாதேஷ் வீரர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை வற்புறுத்துவதே, தொடர் ஒத்திவைக்க முக்கிய காரணம் என்று பங்களாதேஷ் பத்திரிகையாளர் முகமது இசம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னர், இலங்கை அணி எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியையும் விளையாடவில்லை. கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here