20வது திருத்தத்திற்கு எதிராக மேலும் 21 மனுக்கள்!

20 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இதுவரையில் 20 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகிறது. நாளை பிரதம நீதியரசர் தலைமையிலான 4 நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகியோர் அந்த ஆயத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here