தேசியப்பட்டியல் வழங்காததால் சஜித் மீது சட்டநடவடிக்கை: அசாத் சாலி!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய ஒற்றுமை கூட்டணியின் தலைவர் அசாத் சாலி முடிவு செய்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய பட்டியல் ஆசனம் தனக்கு வழங்குவதாக சஜித் வாக்களித்ததாகவும், ஆனால் அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதற்காக சஜித்திற்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here