மல்லாவியில் பூரண கதவடைப்பு: முறியடிக்க பொலிசார் பகீரத பிரயத்தனம்!

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை- அடிப்படை மனித உரிமையை- இராணுவ மற்றும் நிர்வாக பலத்தின் மூலம் முடக்கும் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து, இன்று வடக்கு கிழக்கில் பொது முடக்கத்திற்கு 10 தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன .

இதனை ஒட்டி தமிழர் தாயக பகுதிகள் எங்கனும் கர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மல்லாவி வர்த்தகர்களை மீள திறக்குமாறு பொலிஸ் அச்சுறுத்தல் விடுப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்

வர்த்தக நிலையங்களில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் பெயர்பலகையில் இருக்கும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பெடுக்கும் பொலிஸ் அவர்களை அச்சுறுத்தி கடைகளை திறக்குமாறு வலியுறுத்த்துவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here