வவுனியாவிற்கு வந்த வெளிவிவகார அமைச்சர்!

வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன இன்று வவுனியா செட்டிகுளத்தில் உள்ள சமூக விதை வங்கிக்கு விஜயம் செய்திருந்தார்.

சமூக விதை வங்கியின் ஊடாக செட்டிகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன் நாட்டின் பசுமை செயற்றிட்டத்திற்காக பங்களிப்பு செய்த பயனாளிகளுக்கு சமூக விதை வங்கியின் ஏற்பாட்டில் சான்றிதழும் பணப்ரிசும் வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.

இதேவேளை பயனாளிகளின் வீடுகளிலும் பயன்பதரு மரக்கன்றுகளை நாட்டிவைத்திருந்ததுடன் நல்லின விதைகளும் இதன்போது பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜதாமின குணவர்த்தன, சுரேன் ராகவன், கு. திலீபன், கே. மஸ்தான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here