இலங்கையில் தினமும் 64 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்!

இலங்கையில் தினமும் 64 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், தினமும் 38 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன, 2008 முதல், இலங்கையில் பதிவான புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இலங்கை புற்றுநோயாளிகளில் 16 சதவீதம் பேர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புற்றுநோயிலிருந்து விடுபட ஆரோக்கிய கேடான பழக்கவழக்கங்களிலிருந்து விலக வேண்டும் என்று பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here