யாழில் அங்கஜனின் சகா உள்ளிட்ட சிறு குழு கதவடைப்பிற்கு எதிராக குழப்ப முயற்சி!

நாளையதினம் வடகிழக்கு முழுவதும் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு எதிர்ப்பு சிறிகுழு ஒன்று ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் வரை சென்று பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஒரு மகஜரினை கையளித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சில பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

சில தரப்பின் பின்னணியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று திட்டமிடப்படும் விடயத்தை தமிழ்பக்கம் நேற்று இரவே வெளியிட்டிருந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்மணியொருவரிடம் செய்தியாளர்கள் பேச்சுக் கொடுத்த போது, நாளை கதவடைப்பு நடக்கும் விபரமே அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

புல்லுருவிகள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் போதுமான ஆட்கள் இல்லாததால் சிறு குழந்தையின் கையிலும் பதாகை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தமிழ் எழுத்துப் பிழைகளுடன் பதாகைகள் காணப்பட்டன.

போராட்டத்தை தலைமை தாங்கிய நபர் கடந்த பொதுதேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக, அங்கஜன் இராமநாதன் தலைமையில் போட்டியிட்டிருந்தார். அத்துடன், சில காலம் முன்னர் தென்னிலங்கை ஊடகங்களில் தோன்றி, தன்னை ஆவா குழு ரௌடியென கூறி, பிரபலம் தேட முயன்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here