கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இலங்கை இரண்டாமிடமாம்: சீனா ஆய்வு!

கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இலங்கையை இரண்டாம் நிலையில் தரப்படுத்தி, ஆய்வு முடிவொன்று வெளியாகியுள்ளது.

இந்த தரப்படுத்தலில் முதலிடத்தில், வைரஸின் தோற்றுவாயான சீனாவே உள்ளது.

இந்த தரப்படுத்தலை மேற்கொண்டதும் சீன நிறுவனம் ஒன்றுதான். சீனாவில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் இந்த தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.

ஷாங்காயை தளமாகக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய நிதி ஊடக நிறுவனமான யிகாய் மீடியா குழுமத்தின் ஒரு பகுதியே, YICAI ஆராய்ச்சி நிறுவனமாகும்.

கொழும்பிலுள்ள சீன தூதரகம் இந்த தகவலை ருவிட் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here