20இற்கு எதிராக மு.காவும் நீதிமன்றம் செல்கிறது!

20வது அரசியலமைப்பு திருத்த வரைபிற்கு எதிராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் மனு தாக்கல் செய்யவுள்ளது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை கண்டியில் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

நாளை (28) முஸ்லிம் காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்.

இதேவேளை, 20வது திருத்த வரைபிற்கு எதிராக இதுவரை 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1.ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரஞ்சித் மத்தும பண்டார, 2.தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், 3.மாற்றுக்கொள்கைகளிற்கான மத்திய நிலையம், 4.பாக்கியசோதி சரவணமுத்து, 5.நாகானந்த கொடித்துவக்கு, 6. ஐக்கிய மக்கள் சக்தி இளைஞரணி லிஹினி பெர்னாண்டோ மற்றும் ரசிக ஜெயகொடி, 7.ட்ரான்ஸ்பரன்சி இன்ரநஷனல், 8.கீர்த்தி தென்னக்கோன், 9.மனித உரிமைகள் ஆர்வலர் சி.இளங்கோவன், 10.மனித உரிமைகள் ஆர்வலர் அப்துல் சனூன், 11.அனில் காரியவசம், 12.சட்டத்தரணி இந்திக கலகே, 13.இளைய சட்டத்தரணிகள் சங்கம், 14.அஜந்த பெரேரா, ஓஷால ஹேரத், ஜெரன் ஜெகதீசன்,சந்திம விஜேகுணவர்தன, 15. இலங்கை வணிக, தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சில்வெஸ்டர் ஜெயகோடி, 16. இலங்கை ஆசிரியர் சங்கம், 17. டி.டி.பி. விஜேகுணவர்தன, 18. பி.கே.ஆர். பெரேரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here