ஒரே குரலில் உரிமையை வலியுறுத்துவோம்: கிழக்கு மக்களிடமும் கூட்டமைப்பு வேண்டுகோள்!

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை நசுக்கும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து, நாளை மறுநாள் (28) திங்கள்கிழமை இடம்பெறும் கதவடைப்பு போராட்டத்தில், அனைத்து கிழக்கு வாழ் மக்களும் இணைந்து கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று (26) தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றுபட்ட முடிவிற்கு அமைய எதிர்வரும் திங்கள்கிழமை (28) இடம்பெறும் வடக்கு கிழக்கு- தாயகம் தழுவிய கதவடைப்பு (ஹர்தால்) போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைவரும் பூரண ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சமூகம், பொதுஅமைப்புக்கள், அனைத்து தொழிற்துறையினர், போக்குவரத்துதுறையினர் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, தமிழ் மக்களின் குரவை ஒரே குரலில் வெளிப்படுத்த கரம் கோர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here