கோட்டா அரசின் அத்தனை தடைகளும் உடைப்பு: ஒரே குரலில் பதிவானது தமிழர்களின் நிலைப்பாடு!

தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமையான அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி, தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் நிறைவடைந்தது.

அரசு, ஒட்டுக்குழுக்களின் குழப்பங்களின் மத்தியிலும் தமிழ் மக்கள் ஓரணியாக திரண்டு, தமது உரிமை கோரிக்கையை வலுவாக வெளிப்படுத்தினர்.

அரசு வழக்கம் போல இராணுவம், பொலிசார் மற்றும் நிர்வாக இயந்திரங்களை பாவித்து நினைவேந்தல் நிகழ்வுகளையும், அதற்கான உரிமை கோரிக்கையையும் தடுக்க முனைந்தது. ஈ.பி.டி.பி போன்ற முன்னாள் துணைக்குழுக்களும் தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமைக்கு எதிராக செயற்பட்டன.

எனினும், அரசு மற்றும் ஒட்டுக்குழுக்களின் தடைகளை மீறி தமிழ் மக்கள் வலுவாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் முடிந்தது. திருமதி சசிகலா ரவிராஜிற்கு பானம் வழங்கி உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் பானம் வழங்கப்பட்டது.

தமிழ் மக்களின் உரிமை கோரிக்கையின் நினைவாக சாவகச்சேரி சிவன் ஆலய சூழலில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here