யாழில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரௌடியை நடுவீதியில் விரட்டி விரட்டி வெட்டிச்சாய்த்த மர்ம நபர்கள்!

தனுறொக் என்ற பெயரில் இயங்கும் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்களில் ஈடுபடும் ரௌடிக்குழுவின் தலைவர் தனுவின் மீது இன்று (26) பட்டப்பகலில் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டில், படுகாயமடைந்த பிரபல ரௌடி தனு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த ரௌடி தனுவை யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து வழிமறித்து தாக்கினர். ரௌடி தனு கதறியபடி, நடு வீதியால் ஓடினார். காரில் வந்த ரௌடிகள் வீதியில் விரட்டி விரட்டி வெட்டினர். இறுதியில் அருகில் இருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து ரௌடி தனுவை வெட்டியுள்ளனர்.

அந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதையடுத்து, தாம் வந்த காரையும் விட்டுவிட்டு வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட ரௌடிகள் தப்பி சென்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கார், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here