நெல்லை அருகே இரு பெண்கள் தலை துண்டித்து கொலை!

நெல்லை அருகே இரண்டு பெண்கள் நாட்டு வெடிகுண்டு வீசியும் தலை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் பழிக்குப்பழியாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம் மருகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாந்தி, சண்முகத்தாய். இவர்கள் இருவர் மீதும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. பின்னர் இருவரின் தலையும் துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசியதில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு நடந்த இரட்டைக் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கொலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த கூலிப்படை ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here