என்ன நடக்கிறது போராட்டக்களத்தில்?: பத்திரிகை படிக்கவும் தடைவிதித்த பொலிசார்!

போராட்டம் நடக்கும் இடத்திற்கு செல்லும் பொதுமக்கள் ஆலய வளாகத்திற்கு வெளியில்- வீதியிலேயே இராணுவம், பொலிசாரால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

போராட்டம் நடக்கும் இடத்தில் பந்தல் அமைக்க, பந்தல்காரர்கள் வந்த வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைய பொலிசாரால் அனுமதிக்கப்படவில்லை. திருப்பி அனுப்பப்பட்டது.

போராட்டம் நடக்கும் இடத்திற்கு கதிரைகள் ஏற்றி வந்த வாகனத்தில் கதிரைகள் இறக்க ஆரம்பித்தபோது, அங்கு வந்த பொலிசார் வாகன சாரதி மிரட்டி, 4,5 கதிரைகள் இறக்கிய நிலையில் வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

12.15- வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் தரப்பினர் இன்றைய பத்திரிகையின் பிரதிகளை போராட்டக்காரர்களிடம் விநியோகித்தார். இதன்போது தமிழ் பொலிஸ்காரர் ஒருவர் அடாவடியாக பத்திரிகை பிரதிகளை பறிக்க முயன்று, பத்திரிகைகளை விநியோகிக்க முடியாது என்றார். இதற்கு கிஷோர் தரப்பினர், பதிலடி கொடுத்து, பத்திரிகை படிக்க உங்களால் தடைவிதிக்க முடியாது என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பத்திரிகை பிரதிகளை மீள கொடுத்து விட்டு சென்றார் பொலிஸ்காரர்.

11.30- உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்திற்கு பல்கலைகழக மாணவர்கள் சிலர் வந்தனர். உடனே பரபரப்படைந்த பொலிசார் அவர்களை முற்றுகையிட்டனர். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழாவிற்கு சென்ற மாணவர்கள், போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவிக்க அங்கு வந்தனர். சட்டத்தரணி என்.சிறிகாந்தா அந்த இடத்திற்கு சென்று, நிலைமையை சுமுகமாக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here