வெடி விபத்தில் பார்வையை இழந்த தமிழ் இளைஞனிற்கு இன்ப அதிர்ச்சியளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் (VIDEO)

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று (25) காலமானார்.

கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்று குணமடைந்தாலும், நுரையீரல் தொற்று ஏற்பட்டு, சுவாசக் கோளாறுகளால் அவரை வைத்தியர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இந்த நிலையில், கண்பார்வையிழந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு எஸ்.பி.பி இன்ப அதிர்ச்சியளித்த வீடியோவை மீளவும் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

மாறன் என்ற அந்த நபர், வெடிவிபத்தில் கண்பார்வையை இழந்தவர். கண்பார்வையை இழந்த மனஅழுத்தத்தில் பீடிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் பாலசுப்ரமணியத்தின் பாடல்கள் தான் அவருக்கு ஆறுதலையும் வாழ்க்கையை வாழ விருப்பத்தையும் அளித்தன என்று கூறினார். புகழ்பெற்ற பாடகரைச் சந்திப்பதே தனது வாழ்நாள் கனவு என்ற தனது விருப்பத்தையும் பகிர்ந்து கொண்டார், இது அவரது வாழ்க்கையில் மிக அருமையான விஷயமாக இருக்கும் என்றார்.

பின்னர், எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் இலங்கைக்கு வந்தபோது, மாறனை சந்தித்து இன்ப அதிர்ச்சியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here