நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி ஒட்டுசுட்டானிலும் உண்ணாவிரத போராட்டம்!

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளின் இறுதி நாளான இன்றைய நாளில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாள் புரட்டாதி சனி விரதம் பக்தர்கள் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, தியாக தீபம் திலீபனுடைய நினைவு நாளை நினைவேந்தும் முகமாக அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் இணைந்து உண்ணா நோன்புப் போராட்டத்தை ஆரம்பித்து போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செ.பிறேமகாந்த், பிரதேச சபை உறுப்பினர்களான க.விஜிந்தன், இ.இரவீந்திரன், சி.லோகேஸ்வரன், இ.சத்தியசீலன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பொதுமக்கள் சிலரும் இணைந்து இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலய வளாகத்தில் பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here