தாக்குதலிற்கு 45 நிமிடத்திற்கு முன்னர் புலனாய்வுதுறை உத்தியோகத்தரை சந்தித்த உயிர்த்த ஞாயிறு குண்டுதாரி!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட குண்டுதாரியொருவர், தாக்குதலிற்கு 45 நிமிடங்கள் முன்னதாக புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் ஒருவரை சந்தித்து பேசினார் என்ற அதிர்ச்சி தகவலை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

கொழும்ப தாஜ் சமுத்திரா ஹொட்டலில் தற்கொலை தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு, குண்டு வெடிக்காததையடுத்து தெஹிவலை ரொப்பிகல் இன் விடுதிக்கு வந்து குண்டை பரிசோதித்தபோது உயிரிழந்த குண்டுதாரியே, தாக்குதலிற்கு 45 நிமிடங்களின் முன்னர் புலனாய்வுத்துறை அதிகாரியொருவரை சந்தித்ததாக தெரிவித்தார்.

இது தொடர்பில் சிஐடியினர் முறையான விசாரணை நடத்தாமல் தன் மீதும், ஹேமசிறி பெர்னாண்டோ மீதும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here